கூடமே...!

Friday, December 14, 20120 comments















காலை எழுந்ததும் காப்பி குடித்ததும்
கால்கள் உன்னை நாடிடுதே
வகுப்பறைப் பாடம் சலித்திடும் போது
மனமும் உன்னைத் தேடிடுதே

மைதியும் தனிமையும் தேவைப்படும் போது
சிந்தை உன்னை நாடிடுதே
பாடல்கள் பாடி பாரத்தைக் குறைக்க
மனமும் உன்னைத் தேடிடுதே

காதல் கடிதம் பிரித்து படித்திட
இதயம் உன்னை நாடிடுதே
கவிதைகள் பாடும் பயிற்சிகள் செய்ய
மனமும் உன்னைத் தேடிடுதே

ன்னை நான் நன்கு அறிவேன்
உனக்குள் நான் வந்து விட்டால் - வேறு
யாருக்கும் உன்னுள் இடமில்லை

ப்போதும் உன்னுள்ளே
ஒருவருக்கே இடமுண்டு

ல்லாரும் உன்னை
வெறுப்பது வழமை
எல்லாரையும் உன்னுள்
கொணர்வதே உன் வல்லமை.

தினந்தோறும் உனக்குள்ளே
எனக்கு ஓர் இடம் வேண்டும்
தினமொரு முறையேனும் - உன்
தரிசனம் நான் பெற வேணும்

தினந்தோறும் நான் தேடும்
மல சல கூடமே
காலை தோறும் உனைத் தேடும்
கடனாளிகளில்
நானும் ஒருவன்.

wrote-09/06/2008, type-14/12/2012 - By Robert Dinesh
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. கவிதைப் பூங்கா - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger