பள்ளி போகையிலே....

Friday, December 14, 20120 comments
















ள்ளி போகையிலே....

ட்டாசு பற்றவைத்து
டீச்சருக்கு காதடைக்க
காதடைத்த காரணத்தால்
கோபத்துடன் வெளியேற...
கும்மாளம் நாம் போட்டோமே.

கும்மாளம் முற்றுகையில்
விரையன் சேரின் வீரக்குரல்
கும்மாளம் கலைகிறது
காற்சட்டை கிழிகிறது...

கோபக் கனல் பறக்க
விரையன் சேரை நான் முறைக்க
என்னடா பார்வை என்று
கன்னத்தில் பொறிப்பறக்க...

லைகிறது கோபம்
வழிகிறது கண்ணீா்.

சொத்தையை பதம் பார்த்த
விரையன் மாஸ்டருக்கு
மெத்தப் பாடமொன்று
கற்பிக்க நான் நினைத்தேன்.

மாஸ்டருக்கு பாடம் கற்பிக்க
நான் நினைத்தேன்
எனக்கென்று பாடம்
கற்க நான் மறந்தேன்

டியூஷன் போகையிலே....

ரஸ் மாஸ்டர் படிப்பிக்க
அரட்டைகள் நாம் அடிக்க
முகத்தை குறி பார்த்து
டஸ்டரால் ஒரு தாக்குதல்..

விமலாவிடம் கொடு என்று
அமலாவிடம் மடல் கொடுத்தேன்..
தனக்கு தந்ததாக
அமலா நினைத்துவிட்டு
எனக்கே சைட் அடிக்க

விமலாவை நான் பார்க்க
அமலா எனை பார்க்க
சின்ன சின்ன சீன்கள் போக
பாட வேளை முடிகிறது.

வாங்குகள் சொல்லும் வாயிருந்தால்
அவற்றில் நான் வரைந்த
பெண்களின் பெயா்களை.

ள்ளி அழைத்த போது - போக
விருப்பம் இருக்கவில்லை.
விருப்பம் வந்த போதோ - என்னை
பள்ளி ஏற்கவில்லை.

wrote-29-09-2011.// typed-11-12-2012 By Dinesh.
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. கவிதைப் பூங்கா - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger